7 வது சமச்சீர் கல்வி புத்தக முக்கிய வினாக்கள்

30.01.19 02:51 AM

வாழ்த்து

முதல் பருவம் - இயல்  1

1. பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி இவ்வரிகளை எழுதியவர்  

            திரு.வி.க


2. திரு.வி.க.வின்  பெற்றோர்

            விருத்தாசலனார்  -  சின்னம்மையார்


3. திரு.வி.க. பிறந்த ஊர்

            காஞ்சிபுரம்  மாவட்டத்திலுள்ள  துள்ளம்


4. திரு.வி.க. காலம்  

            26.8.1883  -  17.9.1953


5. துள்ளம் என்ற ஊர் தற்போது  எவ்வாறு 

அழைக்கப்படுகிறது 

            தண்டலம்


6. துள்ளம்  தற்போது  எங்கே  உள்ளது

            சென்னையில்  உள்ள  போரூருக்கு  மேற்கே


7. தொழிலாளர்  நலனுக்கும், பெண்கள்  முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டவர் யார்     

            திரு.வி.க


8. தமிழ்நடையை போற்றி தமிழ் தென்றல் என

சிறப்பிக்கப்படுபவர்  

            திரு.வி.க


9. மேடை தமிழுக்கு  இலக்கணம்  வகுத்தவர்  

            திரு.வி.க


10. திரு.வி.க  தமிழாசிரியராக பணியாற்றிய  இடம்

            சென்னை  இராயப்பேட்டையிலுள்ள  வெஸ்லி  பள்ளி


11. திரு.வி.க ஆசிரியராக பணியாற்றிய இதழ்  

            நவசக்தி


12. திரு.வி.க எழுதிய நூல்கள்

            மனித  வாழ்க்கையும்  காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, உரிமை  வேட்கை,முருகன்  அல்லது 

அழகு,  தமிழ்த்தென்றல்


13. இச்செய்யுள் இடம்பெற்றுள்ள நூல் திரு.வி.க வின் எந்நூலில் இடம்பெற்றுள்ளது  

            பொதுமை  வேட்டல் என்னும்  நூலில்  போற்றி  என்னும்  தலைப்பில்


14. நாடு, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து உலகத்தை ஒரு  குடும்பமாக  கருதுவதே  ..........

            பொதுமை வேட்டல்


15. பொதுமை  வேட்டல் என்னும் நூலில் உள்ள  பாக்களின் எண்ணிக்கை  

            430


16. பொதுமை வேட்டல்  என்னும் நூலில்  உள்ள

தலைப்புகளின் எண்ணிக்கை   

            44


17. சொல்பொருள்

பண் - இசை

வண்மை - கொடைத்தன்மை

போற்றி - வாழ்த்துகிறேன்

onlinemania